யாருக்கும் கிடைக்காத பாக்கியம் ; மாவீரர் துயிலும் இல்லத்தில் சாந்தனின் வித்துடல்

0

யாருக்கும் கிடைக்காத பாக்கியம் சாந்தனுக்கு அமைந்திருப்பதாகவும் தன் தலைவனின் வீட்டையும் ஒரு தடவை பார்த்துவிட்டு, எள்ளங்குளம் துயிலு-மில்லத்தில் மாவீரனாக விதைகப்பட்டுள்ளார் என சமூக ஆர்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 32 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைசாலையில் இருந்து உச்சநீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட போதும் தொடர்ந்து திருச்சி சிறப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு தாயகம் திரும்ப இருந்த நிலையில் சாந்தன் உயிரிழந்திருந்தார்.

பெரும் கதறல் மத்தியில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சாந்தனின் வித்துடல் சாந்தன் அவரின் இறப்பு செய்தி தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தழிப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறான நிலையில் இன்றையதினம் உடுப்பிட்டியில் உள்ள அவரது சொந்த வீட்டில் இறுதிக் கிரியைகள் நடைபெற்று தலைவர் பிரபாகரனின் வீட்டில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இது தொடர்பில் மேலும்சமூக ஆர்வாளர் தனது முகப்பு புத்தகத்தில் தெரிவிக்கையில்,

இத்தனை துயரிலும் பெருந்துயரம் எமது அரசியல் பிரமுகர்களின் வாயடைப்பு. உங்களை நாடாளுமன்றம் அனுப்பியது எம்மக்களே அன்றி இந்தியர்கள் இல்லை. இதை உங்களுக்கு உணர்த்தும் காலம் விரைவில் வரும்.

பிரபல இந்திய அடிவருடிகளின் மெளனம். இந்த சீத்துவத்திற்குள் இந்திய நாணயத்தை குழந்தையின் சட்டைப் பையில் வைத்து கொண்டாடுகிறாய். நீங்கள் எந்த நிகழ்ச்சிநிரலில் இயங்குகிறீர்கள் என்பதை நீங்களே எடுத்துக்காட்டி விட்டீர்கள்.

இந்தியா என்ற பெயரில் இதுவரை இருந்த அத்தனை வெறுப்பும், வெறியாக மாறியிருக்கு. எத்தனை போராட்டம், எத்தனை உயிர்கள், இறுதியாக உன் பசி இதோடு முடியுமா தெரியவில்லை.

உலகில் எந்தவொரு தாயோ சகோதரமோ பார்க்கக்கூடாத காட்சிகளை அரங்கேற்றிவிட்டிருக்கிறாய். தட்டிக்கேட்க்க ஒரு நாதியில்லை என நினைக்கும் போதுதான் யாரையோ இழந்து நடுத்தெருவில் நிற்கின்றோம் என்று கடந்துசெல்ல வேண்டியிருக்கு என கூறியுள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights