‛‛அசைக்கவே முடியாது’’.. 5வது முறையாக மீண்டும் ரஷ்ய அதிபரானார் புதின்.. மேற்குலக நாடுகளுக்கு சிக்கல் !!

0

ரஷ்யாவின் புதிய அதிபராக 5வது முறையாக மீண்டும் விளாடிமிர் புதின் பொறுப்பேற்றார். உக்ரைன் மீதான போர் தொடர்பாக அவர் மீது அதிருப்தி உள்ள நிலையிலும் அவர் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபராகி உள்ளார். இது அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவில் அதிபர் பதவிக்காலம் என்பது 6 ஆண்டுகளாகும். இந்நிலையில் தான் ரஷ்ய அதிபராக விளாடிமிர் புதின் செயல்பட்டு வருகிறார். கடந்த 1999 முதல் அவர் ரஷ்யாவின் அதிபராக உள்ளார். இந்நிலையில் தான் ரஷ்ய அதிபர் தேர்தல் கடந்த மார்ச் மாதம் நடந்தது.

இதில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை எதிர்த்து தேசிய சுதந்திர ஜனநாயகக் கட்சி சார்பில் லியோனிட் ஸ்லட்ஸ்கி, புதிய மக்கள் கட்சி சார்பில் விளாடிஸ்லாவ் டாவன்கோவ், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிகோலாய் கரிடோனோவ் ஆகியோர் போட்டியிட்டனர். மார்ச் மாதம் 15ம் தேதி முதல் மார்ச் 17 ம் தேதி வரை மொத்தம் 3 நாட்கள் ஓட்டுப்பதிவு நடந்தது. அதன்பிறகு ஓட்டு எண்ணிக்கை என்பது நடந்தது. இதில் அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் வெற்றி பெற்றார். அவருக்கு 87.8% வாக்குகள் அதாவது சுமார் 88 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. உக்ரைன் மீதான போர் நடவடிக்கையால் ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதினுக்கு எதிர்ப்பு அலை இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர் வெற்றி பெற்றார்.

மேலும் சோவியத் யூனியன் வீழ்ந்த பிறகு ரஷ்யாவில் நடந்த தேர்தலில் ஒருவருக்குக் கிடைக்கும் அதிகபட்ச வாக்குகள் இதுவாகும். இதன் மூலம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புதிய சாதனையை படைத்தார். இந்நிலையில் தான் அவர் ரஷ்யாவின் அதிபராக மீண்டும் இன்று பதவியேற்றார். ரஷ்ய அதிபராக விளாடிமிர் புதின் பதவியேற்பது இது 5வது முறையாகும். இதுவும் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

மேலும் ஸ்டாலினுக்கு பிறகு தொடர்ச்சியாக ரஷ்யாவில் 3வது முறையாக வெற்றி பெற்ற புதின் 200 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு சாதனையை படைத்துள்ளார். ரஷ்ய அதிபராக பதவியேற்ற பிறகு விளாடிமிர் புதின் பேசினார். அப்போது, ‛‛நாடு முழுவதும் வசிக்கும் ரஷ்யர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். என்னை பொறுத்தவரை நாட்டின் பாதுகாப்பு தான் முக்கியம். அதற்கு நான் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறேன். தாய் நாட்டுக்காக போராடும் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்றார். இன்றைய பதவியேற்பு விழாவில் அமெரிக்கா, பிரிட்டன் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவில்லை. உக்ரைன் உடனான போர் நடவடிக்கையால் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில் விழாவில் யாரும் பங்கேற்கவில்லை. மேலும் ரஷ்ய அதிபராக வரும் 2030 வரை விளாடிமிர் புதின் பொறுப்பில் இருப்பார் என்பதால் அது மேற்கத்திய நாடுகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தலாம் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights