விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஈரானுக்கு செல்லவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, ரஷ்ய (Russia) அதிபர் புடின், சுகோய் – 35 (Sukhoi-35) எனப்படும் 4 விமானங்களின் துணையுடன் ஈரானுக்கு பயணித்துள்ளார்.
அதேவேளை, புடின், உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த இப்ராஹிம் ரைசியின் மரணம் குறித்த இரங்கல் செய்தி ஒன்றை ஈரானுக்கு அனுப்பியிருந்தார்.
ஈரானிய அதிபர் மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சருக்கான இறுதி ஊர்வலம் வடமேற்கு ஈரானில் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், ஈரானில் 5 நாட்களுக்கு துக்க தினம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு, இலங்கை உள்ளிட்ட பல்வேறுநாடுகளில் துக்க தினமாகவும், தேசிய கொடி அரைக்கம்பத்திலும் பறக்கவிடப்பட்டுள்ளது.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ஈரானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.