லங்கா ப்ரீமியர் லீக் (LPL) போட்டித் தொடரின் வீரர்களுக்கான ஏலம் நாளை (21) நடைபெறவுள்ள நிலையில் அதனை நேரலையில் பார்வையிட விளையாட்டு ரசிகர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வீரர்களுக்கான ஏலத்தை நேரலையில் பார்க்கும் வாய்ப்பு வழங்கப்படுவது இதுவே இலங்கையில் முதன்முறையாக உள்ளது.
மேலும், உலகில் இரண்டாவது முறையாக இதுபோன்ற வீரர்கள் ஏலத்தை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, உலகெங்கிலும் உள்ள விளையாட்டு ரசிகர்கள், முன்னணி தொலைக்காட்சியான “ஸ்டார் ஸ்போர்ட்” (Star Sports) மூலம் லங்கா ப்ரீமியர் லீக் (LPL) போட்டித் தொடரின் வீரர்களுக்கான ஏலத்தை நேரலையில் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
2024ஆம் ஆண்டுக்கான லங்கா ப்ரீமியர் லீக் (LPL) போட்டித் தொடருக்கான வீரர்கள் ஏலத்தை கொழும்பில் உள்ள ஷங்கிலா ஹோட்டலில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் ஏலத்தை நடத்துவதற்காக சாரு ஷர்மா இன்று காலை இந்தியாவின் பெங்களூருவில் இருந்து இலங்கை வந்ததாகவும் லங்கா ப்ரீமியர் லீக் போட்டியின் தலைவர் சமந்த தொடங்வல தெரிவித்தார்.
இதேவேளை, இவ்வருட LPL போட்டிக்காக சுமார் 600 வெளிநாட்டு வீரர்கள் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இம்முறை வீரர்களுக்கான ஏலம் மிகவும் போட்டிமிக்கதாக காணப்படும் என சமந்த தொடங்வல சுட்டிக்காட்டியுள்ளார்.