22ஆவது கால்பந்து உலக கிண்ணத் தொடரின் இன்றைய தகுதிச்சுற்றின் பிளே ஓஃப் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் பெரு ஆகிய அணிகள் மோதவுள்ளன.
அதேநேரம், நாளை இடம்பெறவுள்ள மற்றுமொரு போட்டியில் நியூஸிலாந்து மற்றும் கோஸ்டாரிகா ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் இறுதியாக குறித்த தொடருக்கு தகுதிப்பெறவுள்ளன
22வது உலக கிண்ண கால்பந்து போட்டி எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 18ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியில் மொத்தம் 32 அணிகள் கலந்து கொள்கின்றன.
போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் கட்டார் நேரடியாக தகுதி பெற்றுள்ளதுடன், பிரேசில், பெல்ஜியம், ஜேர்மனி, இங்கிலாந்து, போர்த்துக்கல், ஜப்பான், ஈரான் உள்பட 30 அணிகள் தகுதி பெற்றுள்ளன.