18-வது ஐ.பி.எல். தொடரில் அஹமதாபாத் மைதானத்தில் நேற்று 93) நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆர்.சி.பி இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணியின் நீண்ட கால ஏக்கம் தீர்ந்துள்ளது.
இதனை கொண்டாட பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஆர்.சி.பி அணி வீரர்களின் வெற்றி பேரணி பெங்களூருவில் இன்று நடைபெறும் என்று அந்த அணி அறிவித்துள்ளது.