ஐ.பி.எல் தொடரின் 14ஆவது லீக் போட்டியில் பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகிறது.
இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
நாணயச்சுழற்சியில் வென்ற குஜராத் டைட்டன்ஸ் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ரோயல் சேலஞ்சர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 08 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களை பெற்று குஜராத் அணிக்கு 170 வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
இதையடுத்து 170 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய குஜராத் அணி 17 ஆவது ஓவர் நிறைவில் 02 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது