369 அடி உயர சிவன் சிலை இந்தியாவில் திறப்பு

0

உலகிலேயே உயரமான சிவன் சிலை ராஜஸ்தான் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

தியான தோற்றத்தில் ஒரு குன்றின் மீது சிவன் அமர்ந்திருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலை 369 அடி உயரமுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள நத்வாரா நகரில், இந்த பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிலைக்குள் 4 லிப்ட்கள், 3 வரிசை படிக்கட்டுகளும் உள்ளன.

சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலும் அவர்களது வசதி கருதியும் சிலைக்கு உள்ளே ஓர் அரங்கும் சிலையச் சுற்றி உணவு அரங்குகள், பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 3 ஆயிரம் தொன் உருக்கு மற்றும் இரும்பு, கொங்கிரீட் மற்றும் மணல் ஆகியவற்றை பயன்படுத்தி, 10 ஆண்டுகளில் இந்த சிலை கட்டப்பட்டுள்ளது.

இரவிலும் இந்தச் சிலையை காணக்கூடிய வகையில் லேசர் ஒளி விளக்குகள் சிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ளன. 50 ஆண்டுகள் ஆயுட் காலத்தை இந்தச் சிலை கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
250 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் புயலையும் தாங்கி நிற்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. சிலையின் வலிமை குறித்த சோதனைகள் அவுஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights