கச்சதீவு விவகாரத்தால் பா.ஜ.க கூட்டணிக்குள் அதிருப்தி

0

இந்தியாவில் தற்போது தேர்தல் பிரசாரங்கள் பரபரப்பாக இடம்பெற்றுவரும் நிலையில், ஆளும் கட்சியான பா.ஜ.க வெளியிட்ட தேர்தல் அறிக்கை தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது, கச்சத்தீவு மீட்பு குறித்த அம்சம் தேர்தல் அறிக்கையில், இடம்பெறாத நிலையில், தமிழக பா.ஜ.க கூட்டணி கட்சிகள் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க தேர்தல் அறிக்கையை, பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் நேற்று டில்லியில் வெளியிட்டனர். இதன்பேதே அறிக்கையில் கச்சதீவு விவகாரம் குறிப்பிடப்படவில்லை என அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரும், கச்சதீவு மீட்புத் தொடர்பில் அண்மையில் காரசாரமான கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

இவ்வாறான நிலையிலேயே தேர்தல் அறிக்கை தொடர்பில் பா.ஜ.க கூட்டணி கட்சிகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கருணாநிதி முதல்வராக இருந்தபோது, மத்திய காங்கிரஸ் அரசு, கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது.

கச்சத்தீவை தி.மு.க அரசு தாரை வார்த்தது குறித்த விபரத்தை, தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக பெற்று, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையில் கச்சதீவு மீட்பு தொடர்பில் குறிப்பிடவில்லை என்றாலு, கடலோர உள்கட்டமைப்பு திட்டம் வாயிலாக தீவுகளை உலகளாவிய சுற்றுலா தலமாக மேம்படுத்துவோம் என்ற, வாக்குறுதி இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights