உக்ரையனுடனான போக்குவரத்து ஒப்பந்தம் மறுசீலனை: கட்டுப்பாடுகளை நீக்கவும் தீர்மானம்

0

உக்ரையனுடனான போக்குவரத்து ஒப்பந்தத்தை மறுசீலனைக்குட்படுத்தி மாற்றங்களை கொண்டுவர ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம் தெரிவித்துள்ளதாக போலந்து தெரிவித்துள்ளது.

போலந்து பாரஊர்தி சாரதிகளினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இக்கருத்தினை போலந்தின் உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

உக்ரையனுக்கு பொருட்களை கொண்டு செல்லும் வாகன சாரதிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை திருத்தியமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உக்ரையன் எல்லைப் பகுதிகளை மறித்து போலந்து சாரதிகள் போராட்டம் நடத்தியிருந்த நிலையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights