கனடாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞன்!

0

கனடா – ரொரன்ரோ பகுதியில் தமிழ் இளைஞன் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Don Mills தொடருந்து நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, 43 வயதான சுரேஷ் நித்தியானந்தன்  என்பவரே ரொரன்ரோ காவல்துறையினரல் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 30ஆம் திகதி தொடருந்து நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை கொடூரமாக தாக்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைாளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights