நைஜீரியாவில் பெட்ரோல் லொறி விபத்து : 18 பேர் பலி

0

ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள இனுகு மாகாணத்தில் நேற்று(25) மாலை பெட்ரோல் ஏற்றிக்கொண்டு சென்ற டேங்கர் லொறியொன்று  இனுகு-ஒனிஸ்டா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் டேங்கர் லொறியிலிருந்த பெட்ரோல் தீப்பற்றி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவஇடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புப்படையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும், இந்த சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights