குஜராத் தேர்தல்: பாஜகவை ஆம் ஆத்மி கட்சியால் வீழ்த்தி பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா?

0

குஜராத்தின் ராஜ்கோட்டில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் பிரசாரத்திற்கு ஹன்சா பென் பாரத்பாய் பர்மார் வந்துள்ளார். ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் ராஜ்கோட்டின் கோட்டாரியா பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை பிரசார நிகழ்ச்சியைத் தொடங்கினார்.

ஹன்சா பென் சுமார் 10 பெண்களுடன் ஒரு சிறிய டிரக்கில் பயணம் செய்து இங்கு வந்துள்ளார். யார் வந்திருக்கிறார் என்று அவரிடம் கேட்டபோது கேஜ்ரிவால் என்று பதில் சொன்னார். கேஜ்ரிவால் யார்? இந்த கேள்விக்கு ஹன்சா பென் உட்பட எந்த பெண்ணாலும் பதில் சொல்ல முடியவில்லை.

ட்ரக்கில் இருந்த பெண்களிடம் குஜராத் முதல்வர் யார் என்று கேட்டபோது, நரேந்திர மோதி என்று அனைவரும் ஒரே குரலில் சொன்னார்கள். அரவிந்த் கேஜ்ரிவாலின் பிரசாரத்தில், கேஜ்ரிவாலுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று குஜராத்தி மொழியில் கோஷம் எழுப்பப்பட்டது.

திறந்த காரில் கைகளை அசைத்தபடி ஒரு ஹீரோபோல கேஜ்ரிவால் சென்றுகொண்டிருந்தார். சாலையில் இருந்த கேஜ்ரிவாலின் ஆதரவாளர்கள் அவரது கைகளைத் தொட விரும்பவில்லை.

இந்த பிரசாரம் இந்தியாவில் பிரபலங்களின் அரசியலுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்தது. கார்களின் அணிவகுப்பு, அவற்றில் கேஜ்ரிவாலின் பெரிய படங்கள், உயரமான கட்சிக் கொடிகள், மேள தாளத்தின் சத்தம், இவை அனைத்திற்கும் நடுவில், திறந்த காரில் கைகளை அசைத்தபடி கேஜ்ரிவால்.

இந்தியாவில் உள்ள எல்லா பெரிய அரசியல் கட்சிகளும் தேர்தல் நேரத்தில் இதுபோன்ற பிரசாரங்களை நடத்துகின்றன. பிரசாரங்களில் கூட்டத்தை மதிப்பிடுவது கடினம். சாலை முழுவதும் நெரிசல் ஏற்படுவதால், அங்கு நிற்பவர்கள் அனைவருமே பிரசாரத்தின் ஒரு அங்கமாகத் தெரிவார்கள்.

ஆம் ஆத்மி கட்சியின் கொடி யாருடைய கழுத்துகளில் தொங்கிக்கொண்டிருந்தது என்று பார்க்கும்போது, கேஜ்ரிவாலின் முன்னும் பின்னும் சுமார் ஆயிரம் அல்லது ஆயிரத்து ஐநூறு பேர் இருந்தனர்.

இதே ராஜ்கோட்டில்தான் 2002ல் நரேந்திர மோதி முதல்முறையாக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றார். 2012 வரை குஜராத் சட்டப்பேரவை தேர்தலாக இருந்தாலும் சரி அல்லது 2014 முதல் மக்களவை தேர்தலாக இருந்தாலும் சரி, அதன் பிறகு எந்தத்தேர்தலிலும் மோதி தோற்கவில்லை.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights