சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (22) நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
பின்னர் முகாம் வாழ் தமிழர்கள் தங்கள் பயன்பாட்டிற்காக ஒரு சமுதாய நலக்கூடம் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை உடனடியாக ஏற்று முதல்வர் முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் பயன்பாட்டிற்காக சமுதாய நலக்கூடம் கட்டித்தரப்படும் என்று முதல்வர் உறுதியளித்தார்.
முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பான, கௌரவமான, மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை அமைத்து தருவதை இந்த அரசு உறுதி செய்யும் என்று அறிவித்ததோடு, இலங்கை அகதிகள் முகாம் என்பதை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என்று பெயர் மாற்றம் செய்தார்.
முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்பட்டுவரும் மாதாந்திர பணக்கொடை, துணிமணிகள், பாத்திரங்கள், கல்வி உதவித் தொகை ஆகிய நலத்திட்டங்களை உயர்த்தப்பட்ட விகிதத்தில் வழங்கி வருவதோடு, இலவச சமையல் எரிவாயு இணைப்பு. அடுப்பு மற்றும் சமையல் எரிவாயு மானியம், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான அரசு முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் மேம்பாட்டிற்காக சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு நேரில் சென்று, அங்கு தங்கியுள்ள இலங்கை தமிழர்களிடம் அவர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், அவர்களது தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். ஒக்கூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 227 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த முகாமில் முதற்கட்டமாக 90 வீடுகள் கட்டப்பட்டு கடந்த 17.9.2023 அன்று திறப்பு விழா நடைபெற்றது. நான்கு வீடுகள் கொண்ட தொகுப்பு வீடுகளுக்கு 20 லட்சம் ரூபாயும், ஒரு தனி வீட்டிற்கு 5.65 லட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தற்பொழுது மற்ற முகாம்தாரர்களும் புதிய வீடுகள் வேண்டும் என்று கோரிக்கை வைத்ததன்பேரில் வீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆய்வின் போது, முதல்வர் முகாம்வாழ் இலங்கை தமிழர்களிடம் முகாமில் செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்ததோடு, முகாமிற்கு தேவைப்படும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்றும் தெரிவித்தார். அப்போது. முகாம் வாழ் தமிழர்கள் தங்கள் பயன்பாட்டிற்காக ஒரு சமுதாய நலக்கூடம் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை உடனடியாக ஏற்று முதல்வர் முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் பயன்பாட்டிற்காக சமுதாய நலக்கூடம் கட்டித்தரப்படும் என்று தெரிவித்தார்.