இலங்கை நீதிமன்றத்தின் உதவியை நாடிய பிரித்தானிய பெண்

0

இலங்கையிலிருந்து தன்னை நாடு கடத்தும் நடவடிக்கைக்கு எதிராக ஸ்கொட்லாந்தின் சுற்றுலாப்பயணியான கேய்லெய் பிரேசர் எழுத்தானை மனுவை தாக்கல் செய்துள்ளார்.

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் தான் கலந்துகொண்டதாகவும்,அதன் பின்னர் தனது விசாவை இரத்துச்செய்வதற்கான தன்னிச்சையான முடிவை குடிவரவுகுடியகல்வு திணைக்களம் எடுத்துள்ளதாகவும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்கள் குறித்த பதிவுகளை வெளியிட்டமைக்காக ஸ்கொட்லாந்து சுற்றுலாப்பயணியின் விசாவை இரத்துச்செய்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர் 15ம் திகதிக்கு முன்னர் நாட்டிலிருந்து வெளியேறவேண்டும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights