கம்பளையில் பிரபல பாடசாலையொன்றில் ஆசிரியர் மாணவனுக்கிடையில் கைகலப்பு

0

கம்பளை நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியருக்கும் மாணவர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பில் இருவரும் காயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்றுள்ளது

மாணவனின் செவிப்பறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பரிசோதனை செய்வதற்காக அவர் பேராதனை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

கம்பளைப் பொலிஸார் விசாரணை

இதற்கமைய தரம் 13 இல் கல்வி பயிலும் குறித்த மாணவனின் தலைமுடி பாடசாலைக்கு பொருத்தமற்ற முறையில் காணப்பட்டதால் ஆசிரியர் அது குறித்து மாணவனிடன் வினவியபோது இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

கம்பளையில் பிரபல பாடசாலையொன்றில் ஆசிரியர் மாணவனுக்கிடையில் கைகலப்பு | Students In A Popular School In Kampala

இதனை தொடர்ந்து ஆசிரியர், மாணவனின் கன்னத்தில் அறைந்ததாகவும் அதன் பின்னர் மாணவன், ஆசிரியரை அருகேயிருந்த பள்ளத்தில் தள்ளிவிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்துச் சக ஆசிரியர்கள் இணைந்து இருவரையும் கம்பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மேற்படி சம்பவம் தொடர்பாகக் கம்பளைப் பொலிஸாருக்குப் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights