மடியில் வைத்து கொடுமை! சிம்புவை காதலிக்கும் பிரபல நடிகையின் குமுறல்

0

பிரபல ரிவியில் ஒளிப்பராகி வந்த 7C சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி. இதையடுத்து அவருக்கு பல வாய்ப்புகள் தேடி வந்தன.

தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாராடி நீ மோகினி என்ற சீரியல் தொடரில் நடித்து வருகிறார்.  சமீபத்தில் நடிகர் சிம்பு தனக்கு லவ் டார்ச்சர் கொடுத்து வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதுமட்டுமின்றி சிம்புவின் வீட்டு முன் அவர் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார்.

சிம்புவைத் தவிர நான் வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தான் போராட்டமா? லவ்வுக்குலாம் போராட்டம் இல்லையா? என்று இன்ஸ்டாவில் பதிவிட்டார்.

மற்றொரு பதிவில் போனில் 4 சதவீதம் தான் சார்ஜ் உள்ளது. ப்ளீஸ் வாங்க. பர்ஸ்ட்டு சிம்பு வேணும், நெக்ஸ்ட் தண்ணி வேணும்.

எனக்கு அவ்ளோ ஒர்த்துனு இவ்ளோ வருஷமா எனக்கே தெரியல, புரிய வச்சிட்டாரு! அவர் வேணும், அவரை பார்க்கணும்..

இப்பவே” என்று இன்ஸ்டாவில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த பதிவுகள் இணையதளத்தில் அதிகமாக வைரலானது.

மடியில் அமர வைத்து அரங்கேறிய கொடுமை! சிம்புவை காதலிக்கும் பிரபல நடிகையின் குமுறல்

 

இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளிக்கையில் ஸ்ரீநிதி பரபரப்பு தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

அந்த பேட்டியில் அவர் பேசுகையில், சேனலின் ஹெட், ஒரு ஷோ பற்றி பேச வேண்டும் என்று என்னிடம் போன் செய்து ஆபிசுக்கு வர சொன்னார்கள்.

நானும் அவர் சொன்ன விலாசத்திற்கு சென்றேன். ஆனால், அது ஆபீஸ் மாதிரி இல்லை. பார்ப்பதற்கு வீடு மாதிரி இருந்தது.

அதன் உள்ளே ஆபீஸ் போன்ற செட்டப் வைத்திருந்தார்கள். அப்போது அந்த சேனலின் ஹெட் என்னிடம் தவறாக அணுகினார். தனியா கூப்பிட்டு மடில உட்கார சொன்னாரு என்று பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

மடியில் அமர வைத்து அரங்கேறிய கொடுமை! சிம்புவை காதலிக்கும் பிரபல நடிகையின் குமுறல்

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights