கொழுமபு, ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய கலபொட ஞானிஸ்ஸர தேரர் வெள்ளிக்கிழமை (02) காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 81 ஆகும். திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் காலமானார்.
ஹிக்கடுவை ஸ்ரீ சுமங்கல நாயக்கரின் புகழ் பெற்ற சீடர் தலைமுறையில் இருந்த இவர், இந்நாட்டில் அனைவராலும் ‘கங்காராம பொடி ஹாமுதுருவோ’ என்று அழைக்கப்பட்டார்.
கங்காராம என்றதும் ‘கங்காராம பொடி ஹாமுதுருவோ என்று பெயர் உச்சரிக்கப்பட்டதும் கங்காராம விகாரையுமே பௌத்த மக்களுக்கு நினைவில் தோன்றும். அவர் அந்தளவுக்கு கங்காராம விகாரையின் தற்போதைய நவீனத்துக்கு முன்னோடியாக செயற்பட்டமையே இதற்கு காரணமாகும்.
இலங்கையின் பொடி ஹாமுதுரு என்றால், கிராமங்களிலுள்ள பன்சலைகளின் சிறிய தேரர்கள் நினைவுக்கு வந்தாலும் கூட, பெயர் போன ஒரேயொரு பொடி ஹாமுதுரு என்றால் அனைவரினதும் நினைவுக்கு வருவது கங்காராமவின் கலபொட ஞானிஸ்ஸர தேரரேயாகும்.
கலபொட ஞானிஸ்ஸர தேரரைப் போன்று, அரசியல் வாதிகள் மிக நெருக்கமான உறவைக்கொண்டிருந்த தேரர் ஒருவர் இந்நாட்டு வரலாற்றில் இருப்பாராயின், அது ஹேன்பிடகெதர ஞானிஸ்ஸர தேரர் அல்லது அண்மைய காலம் வரைக்கும் செயற்பட்ட மாதுளுவாவே சோபித தேரராகத்தான் இருக்க வேண்டும்.
1943 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி மாத்தறை கலபொட பிரதேசத்தில் பிறந்த கலபொட ஞானிஸ்ஸர தேரர், தனது 10 ஆவது வயதில் துறவரம் பூண்டார். அந்நேரம் அவர் கபுதுவ பாடசாலையில் தரம் நான்கில் கல்வி கற்றுக் கொண்டிருந்தார்.
இது அன்று பொடி ஹாமுதுருவோ தான் துறவறம் பூண்ட கடந்த கால நினைவை மீட்டிய நிகழ்வாகும்.
நான் வித்யோதய கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தேன். அந்தக் காலத்தில் என் தேவையாக இருந்தது கலாநிதி பட்டத்தைப் பெற்றுக் கொள்வதல்ல. கண் தெரியாத தலைமை தேரரைப் பார்த்துக் கொள்வதிலேயே நான் பாடுபட்டேன். எனது சிறிய வயதிலேயே என்னிடம் விஹாரை பொறுப்பளிக்கப்பட்டது. அந்த வயதில் பாரிய பொறுப்பு கிடைப்பதும் மிகவும் அபூர்வமானதாகும்.
ஞானிஸ்ஸர தேரர் கடந்த வெள்ளிக்கிழமை (02) உயிர் துறந்தபோது அவருக்கு வயது 81. என்றாலும் எந்தளவு வயோதிபராக இருந்த போதிலும் அவரை அனைவரும் அழைத்தது சின்ன ஹாமுதுரு என்றேயாகும். ஞானிஸ்ஸர தேரர் ஒருமுறை நான் இலங்கை தீபத்தில் சேவையாற்றியபோது தனக்கு சின்ன ஹமுதுருவோ என்ற பட்டம் வழங்கப்பட்டதாக கூறினார்.
1960 ஆம் ஆண்டில் எனது தலைமை தேரரின் கண்கள் தெரியாமற்போனது. அப்போது எனக்கு வயது 16 ஆகும். தலைமைத் தேரர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதனால், 16 வயதிலேயே நான் விஹாரையின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.
அதுமாத்திரமல்ல, பிரித், நேர்ச்சை, புண்ணிய சேவைகள், சமூக சேவை போன்றவற்றை செய்து கொண்டே எனது கல்வியையும் தொடர வேண்டியிருந்தது. இதற்கிடையில், கண் தெரியாத தலைமை தேரரையும் கவனித்துக் கொண்டேன்.
எனவே, எங்கள் தலைமைத் தேரர் உயிருடன் இருக்கும்போதே நான் கங்காராமாதியாக என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளலாமா? நான் அவ்வாறு சொல்லிக்கொள்ள விரும்பவில்லை. தலைமைத் தேரர் இருக்கும்போதே, நான் விஹாரையின் சிறிய தேரரானேன். 1984 ஆண்டு தலைமைத் தேரர் மறைந்தார். அதன் பின்னரே, விகாராதிபதியாக நான் பதவி உயர்வு பெற்றேன். எனினும் எல்லோரும் என்னை வழக்கம் போன்று பொடி ஹாமுதுரு (சின்ன துறவி) என்றே அழைத்தனர்.
இன்றும் பலருக்கு எனது பெயர் கலபொட ஞானிஸ்ஸர என்பது தெரியாது. ஆனால் பொடி ஹாமுதுரு (சின்ன துறவி) எனச் சொன்னால் நாடு முழுவதும் தெரியும். கங்காராம கலபொட ஞானிஸ்ஸர தேரர் எனச் சொன்னதும் எமது நினைவுக்கு வருவது லேக் ஹவுஸ் ஸ்தாபகர் டீ. ஆர். விஜேவர்தனவின் பரம்பரையும், ஜே. ஆர். ஜயவர்தனவின் பரம்பரையும் மற்றும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பரம்பரையுமாகும்.
இந்த வரலாற்றைத் தேடிச் செல்லும்போது ஹெலேனா விஜயவர்தன மற்றும் பிலிப் விஜயவர்தன முஹந்திரம் ஆகியோருக்கு ஏழு பிள்ளைகள் இருக்கின்றனர். அந்தப் பிள்ளைகளுள் ஒருவராக இருப்பது லேக்ஹவுஸ் ஸ்தாபகர் டீ. ஆர். விஜயவர்தனவாகும். டீ. ஆர். விஜயவர்தனவின் மகன் தற்போதைய விஜய பத்திரிகை நிறுவனத்தின் ஸ்தாபகர் ரஞ்சித் விஜேவர்தனவாகும். டீ. ஆர். விஜயவர்தனவின் மகளது மகனே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவாகும். அதிகாரத்தில் இருந்தாலும், அதிகாரமின்றி இருந்தாலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய நண்பராக இருந்ததார் பொடி ஹாமுதுரு.
2011ஆம் ஆண்டில் எந்த ஊடகங்களுக்கும் தெரிவிக்காமல் பொடி ஹாமுதுரு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்காக போதி பூஜையினை நடத்திய கதையும் உள்ளது. ரணில் விக்கிரமசிங்க போன்ற உலகறிவும், பொருளாதார அறிவும், அரசியல் அறிவும் உள்ள தலைவர் கட்சியை விட்டு வெளியேறினால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்படப்போகும் அழிவை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி என்பது அனைவருக்குமான கட்சியாகும்.
எனவே அனைவரின் கருத்துக்களையும் கேட்க வேண்டும். அன்று ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன ஒரு தேரரிடம் “எனக்கு புத்தரின் போதனைகள் தெரியாது. எனக்குச் சொல்லித் தாருங்கள். தேரர்களுக்கு அரசியலைத் தெரிந்து கொள்ள விருப்பம் என்றால் நான் சொல்லித் தருகிறேன்” என்றார். இந்த இடத்தில் எனக்கு அந்த கூற்று நினைவுக்கு வருகிறது.
ஒரு கட்சியினுள் யாராவது ஒரு கருத்து வேறுபாட்டை உருவாக்கினால், அது ஒரு உத்தியாகும். அதைவிட அது ஒரு பயங்கரவாதமுமாகும். அன்று ரணில் பிரதமராகி விஹாரைக்கு வந்தபோது நான் ரணிலின் பெயரை சொல்லவில்லை. சஜித் பிரேமதாசவின் பெயரையே கூறினேன். அவர்களுக்கு ஏதாவது புரிய வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு கூறினேன். ஆனால் அவருக்கு புரிந்ததா என்று எனக்கு தெரியவில்லை.
ரணில் விக்கிரமசிங்க சமயச் சடங்குகளையும் நற்பண்புகளையும் அறிந்த நல்லவர். அவரது பாட்டி ஹெலேனா விஜயவர்தன அம்மையார்தான் களனி விஹாரையை புனரமைத்தவர். இன்று அதன் நிர்வாக சபையின் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார். அவர் சங்கத்தினரை மதிக்கும் ஒருவர். இவ்வாறானதொரு தலைவர் கிடைத்தமை ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த பாக்கியமாகும்.
இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு நபராக பொடி ஹாமுதுரு இருப்பார். 1972 இல் இலங்கை குடியரசாக மாறியபோது பொடி ஹாமதுருவிற்கு வயது 29 ஆகும். 1972 இல் இலங்கை குடியரசாக மாறியபோது விழா நடத்த இடமிருக்கவில்லை. அப்போது பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபம் இருக்கவில்லை.
இறுதியில், றோயல் கல்லூரியின் புதிய அரங்கில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. புதிய அரங்கில் வைபவம் இடம்பெற்றதுடன், ஜனாதிபதி வில்லியம் கொபல்லவவின் உத்தியோகபூர்வ இல்லமான அரச இல்லத்தில் ஆசீர்வாதம் வழங்கும் விழாவில் உணவு வழங்கப்பட்டது. அஸ்கிரி, மல்வத்து மகா நாயக்க தேரர்கள், பலாங்கொட ஆனந்த மைத்திரி தேரர், வித்யோதய வித்யாலங்கார பரிவேனாதிகாரி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
எனினும் ஜனாதிபதி வில்லியம் கொபல்லா அரச இல்லத்தில் பன்சில் வழங்கி எச்சரிக்கை உபதேசம் செய்வதற்கு அழைப்பு விடுத்திருந்தது சிறு வயதாக இருந்த பொடி ஹாமுதுருவையாகும். அப்போது திருமதி பண்டாரநாயக்காவுக்கு பொடி ஹாமுதுரு மூன்று எச்சரிக்கைகளை விடுத்திருந்தார்.இந்து – லங்கா ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்ட சந்தர்ப்பத்தில் கொழும்பில் முதலில் கறுப்பு கொடியை பறக்கவிட்டது கங்காராமயவாகும்.
ஜே. ஆர். இந்தியாவின் பொறியில் சிக்கியுள்ளார் என்றே பொடி ஹாமுதுருவோ அடிக்கடி கூறிவந்த கதையாகும்.
இந்து – லங்கா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு முன்னர் ஜே. ஆர். ஜயவர்தன மூன்று தடவைகள் இந்தியாவுக்குச் சென்றார்.
அன்றே சென்று அன்றே மீண்டும் திரும்பினார். அந்த மூன்று சந்தர்ப்பத்திலும் நானும், களனி விஹாரையின் வத்தள சீலாரதன தேரரும்தான் பிரித் ஓதி ஆசீர்வாதம் வழங்கி எச்சரிக்கை விடுத்து அனுப்பினோம். என்றாலும் நான்காவது தடவையாகவும் ஜனாதிபதி இந்தியாவுக்குச் சென்றார். அப்போது அவர் இந்தியாவில் ஒரு முடிச்சில் சிக்கிக் கொண்டார்.
ஜே.ஆர். நான்காவது தடவையாக இந்தியாவுக்குச் சென்ற நேரம்தான் பங்களாதேஷில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அந்நேரம் ராஜிவ் காந்தி ஜே. ஆரிடம் “சேர் வெள்ளப் பெருக்கைப் பார்ப்பதற்கு பங்களாதேஷ் போவோமா” எனக் கேட்டுள்ளார்.
ரஜீவ் காந்தி சொன்னதை ஜே. ஆர். செய்தார். அன்று பங்களாதேஷ் சென்று இலங்கைக்கு வர ஜனாதிபதியால் முடியாது போனது. அன்றிரவு அவர் இந்தியாவில் தங்கியிருந்தார். எப்படியோ அன்றிரவு அவர் இந்தியாவின் முடிச்சு ஒன்றில் சிக்கிக் கொண்டார்.
அதனால்தான் அவர் அடிபணிந்து ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. அவ்வாறின்றி அவர் ஒருபோதும் இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்புவதற்கு ஒப்பமிடப்போவதில்லை.
ஜே.ஆர் ஒரு முடிச்சில் சிக்கியதை நான் நன்கறிவேன். ஏனென்றால் நான்தான் அவருக்கு எப்போதும் பிரித் ஓதி இந்தியாவுக்கு அனுப்பினேன். ஜே. ஆரின் உணர்வுகளை நான் நன்கு அறிவேன்.
இந்திய– – இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான தினம், விஹாரையிலுள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் பூட்டுப் போட்டு பூட்டிவிட்டு, இதற்குப் பின்னர் கடவுளுக்கு தீபம் ஏற்றப்போவதில்லை என தேரர்கள் தங்களுக்குள் கூறிக்கொண்டனர்.
எனினும் கடற்படை வீரர் விஜித ரோஹண விஜயமுனி அன்று ராஜீவ் காந்தியைத் துப்பாக்கியால் தாக்கியதைக் கேள்விப்பட்டவுடன், பொடி ஹாமுதுரு விஹாரையைத் திறந்து விளக்குகளை ஏற்றத் தொடங்கினார். இன்று மாதுலுவாவே சோபித தேரர் பொடி ஹாமுதுருவினால் மரணத்திலிருந்து காப்பாற்றப்பட்ட கதை பலருக்கு தெரியாது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக ஊர்வலம் சென்ற தேரர்களில் பிரதானமானவர் மாதுலுவாவே சோபித தேரராகும்.
அன்றைய தினம், சிலர் அவரை மகாபோதியில் தடுத்து வைத்து தீ வைக்கப் போகிறார்கள் என்ற செய்தி பொடி ஹாமுதுருவிற்கு கிடைத்தது. அக் குழுவினர் முயற்சித்தது சோபித தேரருக்கு தீ வைத்துவிட்டு அவர் தீக்குளித்து இறந்ததாக செய்தி பரப்புவதற்கேயாகும்.
பொடி ஹாமுதுரு பிரதமர் ஆர். பிரேமதாசவுடன் தொலைபேசியில் உரையாடி சம்பவம் தொடர்பில் விளக்கமளித்துள்ளார். அதன் பின்னர் பிரதமர் பிரதி பொலிஸ்மா அதிபர் குணதிலக்கவுடன் ஒரு குழுவை அனுப்பி சோபித தேரரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார்.
கங்காராமவின் கலபொட ஞானிஸ்ஸர தேரர் இல்லையென்றால் ரணசிங்க பிரேமதாச இந்நாட்டின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகியிருக்க முடியாது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னைய நாள், ஜே.வி.பியினால் வாக்களிக்கச் செல்லும் மக்களைக் கொல்லப் போவதாக தடை விதித்தது. ஜே.வி.பி.யின் கொலைக் கட்டளைக்கு அஞ்சிய பொது மக்கள், மறுநாள் வாக்களிப்பதைத் தவிர்த்து வீட்டிலேயே இருக்க முடிவு செய்தனர். ஜே.வி.பி. உத்தரவையடுத்து ஆர். பிரேமதாச உடனடியாக ஒரு குழுவை கங்காராமவுக்கு அனுப்பினார்.
நாம் என்ன செய்தோம். ஜே.வி.பி.யினர் அடித்ததைப் போன்ற போஸ்டர் ஒன்று தயாரிக்கப்பட்டது. அந்த போஸ்டர் கங்காராமவிலிருந்தே எழுதப்பட்டிருந்தது. “ஜே.வி.பி. தடையை நீக்கிவிட்டது. வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களியுங்கள். இப்படிக்கு மக்கள் விடுதலை முன்னணி” என அந்த போஸ்டரில் அச்சிடப்பட்டிருந்தது. நான் அந்த போஸ்டரை ஒரு மில்லியன் அச்சிட்டேன். மறுநாள் காலையில், மக்கள் பார்த்தபோது, நாடு முழுவதும் வாக்களிக்க அழைப்புவிடுக்கும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
அது ஜே.வி.பி.யால் ஒட்டப்பட்ட போஸ்டர் என்றே மக்கள் நம்பினார்கள். இதனைக் கண்டு மக்கள் அச்சமின்றிச் சென்று வாக்களித்தனர்” என பொடி ஹாமுதுருவோ இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார். புதிய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு ஜனசவிய யோசனையை வழங்கியவரும் இந்த பொடி ஆமதுருவேயாகும்.