“சுதந்திர தினம் நெருங்கிறது – ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி ஏற்றுங்கள்“: பிரதமர் நரேந்திர மோடி

0

இந்தியாவின் சுதந்திர தினம் எதிர்வரும் ஒகஸ்ட் 15ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.

இதனால் ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்பதை பிரதமர் நரேந்திர மோடி ஊக்குவித்து வருகிறார்.

அதன்படி, ‘ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி’ என்ற பிரசாரத்தை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் அவரது எக்ஸ் தளத்தில், ‘சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி எனும் பிரசாரத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.

அதன் தொடக்கமான எனது எக்ஸ் தளத்தின் முகப்பில் தேசியக்கொடியை வைத்துள்ளேன்.

நீங்களும் அவ்வாறு செய்வதொடு தேசியக் கொடியுடன் செல்ஃபி எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பகிரும்படியும் கேட்டுக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights