இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி தற்போது இலங்கைக் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கேலியாக மாறிவிட்டாலும் கூட அதை எண்ணி கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் கவலையை வெளியிட்டு வருகின்றனர்.
சுற்றுலா இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 3-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது.
இது இலங்கை கிரிக்கட் ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
போட்டித் தொடர் எனும் போது அதில் வெற்றி, தோல்வி என்பது சகஜமாக இருந்தாலும், ஒரு நாட்டை பிரநிதித்துவப்படுத்தி ஒரு அணி விளையாடும் போது இதை விடவும் பொறுப்புணர்ச்சியுடனும் கடமையுடனும் செயற்பட வேண்டும்.
தோல்வியை மட்டுமே சந்தித்து வரும் கிரிக்கெட் ரசிகர்கள் தற்போது இலங்கைக்கான மகளிர் கிரிக்கெட் அணியினரை போற்ற ஆரம்பித்து விட்டனர்.
விடாமுயற்சி, குழு ஒற்றுமை, கடமையுணர்வுடன் இணைந்து இலங்கைக்கான மகளிர் அணி ஆசியக் கிண்ணத்தை தனதாக்கியது.
மைதானத்தில் மட்டுமல்லாது தனது வாழ்விலும் ஒரு சவால்மிக்க பல விடயங்களை கடந்து வரும் மகளிர் அணி வீராங்கனை பற்றியதே இந்தக் கதை.
ரன்தெணிய தேர்தல் தொகுதி, நாவதகல- 100 ஏக்கர் கிராமத்தில் வசித்து குறைந்த வருமானம் பெறும் ஏழை குடும்பத்தில் பிறந்து இலங்கை கடற்படையை பிரநிதித்துவப்படுத்தி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி சார்பில் பந்து மூலம் பல திறமைகளைக் காட்டும் அவர் தான் கே.டீ. உதேஷிகா பிரபோதனீ.
ரன்தெணிய தேர்தல் தொகுதியில் ஏழைக் கிராமத்தில் கருவாப்பட்டை இடிப்பதை ஜீவனோபாயமாகக் கொண்ட கே.டீ. பிரேமசிறி மற்றும் ஐ.டீ. குசுமலதா தம்பதியினருக்கு மகளாக 1985ஆம் ஆண்டு பிறந்த உதேஷிகா கிராம பாடசாலையான கரந்தெனிய பாடசாலையில் சாதாரண தரம் வரையில் கல்வி பயின்று அதன் பின்னர் உயர்தரக் கல்விக்காக எல்பிட்டிய புனித திரேஸா பெண்கள் கல்லூரியில் இணைகிறார்.
கலைப்பிரிவில் உயர்தரத்தில் சித்தியடைந்த அவர் விளையாட்டில் சிறு வயதிலிருந்தே ஆர்வம் காட்டி வந்தவர் ஆவார்.
அவர் காலி மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜ் நிரோஷன் பயிற்சியின் கீழ் கிரிக்கெட் விளையாட்டில் பிரவேசித்து இடது கை வேகப்பந்து வீச்சாளராக சிறந்து விளங்கினார் அதன் விளைவாக 2009ஆம் ஆண்டில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் இணைந்தார்.
அதன் பின்னர் இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் ரொமேஷ் ரத்நாயக்கவின் பயிற்சியின் கீழ், திறமையான இடது கை பந்துவீச்சாளராக மேலதிக பயிற்சிகளைப் பெற்று, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் வழக்கமான பந்துவீச்சாளராக அணியில் இணைந்தார்.
2011ஆம் ஆண்டு, கிரிக்கெட்டில் தனது சிறப்பான திறமை காரணமாக இலங்கை கடற்படையில் , கடற்படை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், 2010, 2013, 2014, 2016, 2017, 2018, 2020 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டிகளிலும் T20 கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்று சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
2024 ஆசிய மகளிர் கிரிக்கெட் சாம்பியன் கிண்ணத்துக்காக நடைபெற்ற போட்டியில், வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் அவர் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார் மற்றும் இரண்டு தொடக்க விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
இலங்கை கிரிக்கெட் விளையாட்டின் கீழ் மட்டத்திற்கு வீழ்ந்து இலங்கை கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படாத இலங்கையை மிகவும் இக்கட்டான காலக்கட்டத்தில் மீண்டும் உலகிற்கு கொண்டு வந்த இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் உதேஷிகா வெற்றியின் பின் கடந்த 30ஆம் திகதி காலை கொழும்பு முதல் எல்பிட்டிய நோக்கி பயணித்த தனியார் பேருந்திலேயே தனது கிராமத்திற்கு சென்றுள்ளார்.
கிராமவாசிகள் அன்புடன் அவரை ஏற்று வாகனப் பேரணியில் அழைத்துச் சென்றது அவருக்கு வழங்கப்பட வேணடிய ஒரு கௌரவமாகவே.
ஆக, திறமையான வீரர்கள் என்றும் போற்றப்படுவார்கள்.