கனடாவில் உயிருக்கு போராடிய நிலையில் இலங்கை திரும்பிய இளம் குடும்ப பெண் உயிரிழப்பு!

0

கனடாவில் உள்ள கான்கார்டியா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த  இலங்கை மாணவி ஒருவர் கடுமையான புற்றுநோயுடன் போராடிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் குருநாகல் தொரட்டியாவ, மல்லவபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய டபிள்யூ.எம். மாஷா விஜேசிங்க என்ற திருமணமான பட்டதாரி மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கனடாவில் உயிருக்கு போராடிய நிலையில் இலங்கை திரும்பிய இளம் குடும்ப பெண் உயிரிழப்பு! | Canada Battled Cancer Sri Lankan Woman Dies

கனடாவின் கான்கார்டியா பல்கலைக்கழகத்தில் கணிதப் பிரிவில் தத்துவவியல் முதுகலைப் படிப்பை படித்து வந்த நிலையில் கடுமையான வயிற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இவ்வாறான நிலையில் குறித்த மாணவி தனது கணவருடன் இலங்கைக்கு வந்து புற்று நோய்க்கு  சிகிச்சை பெற்ற வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் பேராதனை பல்கலைகழகத்தின் பட்டதாரி மாணவியும் அதே சமயம் பேராதனை பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

மேலதிக படிப்பிற்காக கனடா சென்றதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights