ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராவதற்குத் தேவையான ஆதரவைப் பெற்றதாக அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.
கட்சி மற்றும் நாட்டின் நலனை கருத்திற்கொண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டியிலிருந்து தாம் விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்தார்.
அத்துடன் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கும் ஜோ பைடன் அனுமதியளித்திருந்தார்.
இதன்பின்னர் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராவதற்குத் தேவையான ஆதரவைப் பெற்றதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“நான் ஜனாதிபதிக்கான எனது பிரச்சாரத்தை ஆரம்பித்து, வேட்புமனுவைப் பெற விரும்புவதாகக் கூறினேன்.
எங்கள் கட்சியின் வேட்பாளராக ஆவதற்குத் தேவையான பரந்த ஆதரவைப் பெற்றதில் நான் பெருமைப்படுகிறேன், மேலும் கலிபோர்னியாவின் மகளாக, நான் பெருமைப்படுகிறேன்.
எனது சொந்த மாநிலத்தின் பிரதிநிதிகள் எங்கள் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு உதவினார்கள்,விரைவில் வேட்புமனுவை முறையாக ஏற்றுக்கொள்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன்,” என்று அவர் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.