பதவிக்காலமும் துரதிர்ஷ்ட பிரதமர்களும்

0

இலங்கையின் பிரதமர்  பதவி 1947 ஆம் ஆண்டில் இலங்கை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தபோது   உருவாக்கப்பட்டதில் இருந்து இதுவரையில் 15 பேர் மாறி,மாறி பிரதமர்களாகப் பதவிவகித்துள்ள போதும் இந்த பிரதமர்களில் பலருக்கும் பிரதமர் பதவிக்காலத்தை முழுமையாக பூர்த்தி செய்ய விடாத துரதிர்ஷ்டத்துக்கும் நெருங்கிய தொடர்புள்ள வரலாறே தொடர்ந்தும் பதிவாகி வருகின்றது.

அதாவது இலங்கையின்  பிரதமர்களாக இருந்தவர்களில் ஓரிருவரைத் தவிர ஏனைய  பலரும் தமது முழுமையான ஆட்சிக்காலம் வரை அந்தப்பதவியில் தொடர  அவர்களை துரதிர்ஷ்டம் விட்டுவைக்கவில்லை.

துரதிர்ஷ்டம் துரத்தும் இந்த பிரதமர்கள் பட்டியலில் 4 தடவைகள் பிரதமராகவிருந்த  போதும் பிரதமர் பதவிக்காலத்தை 4 தடவைகளும்  முழுமையாக பூர்த்தி  செய்யாத மஹிந்த ராஜபக்‌ஷ இரண்டாமிடத்தையும்  6 தடவைகள் பிரதமராகவிருந்தும் 6 தடவைகளும் பிரதமர் பதவிக்காலத்தை முழுமையாக பூர்த்தி  செய்ய முடியாத ரணில் விக்கிரமசிங்க முதலாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

இலங்கை பிரதமர்களுக்கும் அவர்களை தொடர்ந்தும் பதவியில் இருக்க விடாது விரட்டும்  துரதிர்ஷ்டத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து பார்ப்போம், இலங்கையின் பிரதமர்  பதவி 1947 ஆம் ஆண்டில் இலங்கை பிரித்தானியரிடமிருந்து விடுதலை அடைந்தபோது உருவாக்கப்பட்டது.1978 வரை பிரதமரே அரசுத்தலைவராகவும் இருந்தார்.

1978 இல், அப்போதைய பிரதமர் ஜே. ஆர். ஜெயவர்தன நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிவித்தார்.

இதன் மூலம் பிரதமரின் அதிகாரங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டன.ஜனாதிபதி நாட்டுத் தலைவராகவும், அரசுத் தலைவராகவும் ஆனார்.  பிரதமர் பதவி அதிகாரம் குறைக்கப்பட்ட பதவியானது.

இலங்கையில் பிரதமர் பதவி 1947 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதில் இருந்து இதுவரையில் 15 பேர் மாறி,மாறிப் பிரதமர்களாகப் பதவியேற்றுள்ளனர்.

இவர்களில் இலங்கையின் முதலாவது பிரதமர் என்ற பெருமைபெற்ற  டி. எஸ். சேனநாயக்க 1947 செப்டெம்பர் 24 – 1952 மார்ச் 22 வரை பதிவு வகித்த நிலையில் முழு பதவி க்காலத்தையும் பூர்த்தி செய்யாமலேயே காலமானார்  (அப்போது பதவி க்காலம் 6 வருடங்கள்). இதனால் இவரின் மகனான டட்லி சேனாநாயக்க இலங்கையின் இரண்டாவது பிரதமராக 1952 மார்ச் 26 பதவியேற்றார்.

ஆனால் அவராலும் 1953 ஒக்டோபர் 12 வரை  பதவி  வகித்த நிலையில் இராஜினாமா செய்ததையடுத்து   பிரதமராக பதவியேற்ற சேர்ஜோ.ன் கொத்தலாவலயால்  1953 ஒக்டோபர் 12 முதல் 1956 ஏப்ரல் 12 வரை மட்டுமே பதவி வகிக்க முடிந்தது.

இதனையடுத்து 1956 ஏப்ரல் 12 இல் பிரதமராக பதவியேற்ற டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க  1959 செப்டெம்பர் 26 இல் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதனால் கலாநிதி டபிள்யூ.  தஹநாயக்க 1959 செப்டெம்பர் 26இல் பிரதமராக பதவியேற்று  1960 மார்ச் 20 வரை பிரதமர் பதவியில் இருந்தார்.

இந்நிலையில் மீண்டும் டட்லி சேனநாயக்க 1960 மார்ச் 21 இல் பிரதமராக பதவியேற்றபோதும்  1960.ஏப்ரல் 22 இல் அவரது அரசு தோற்கடிக்கப்பட்டதனால் பதவியிழந்தார்.

இதனையடுத்து திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராக 1960 ஜூலை 21  பதவியேற்று உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்று 1965 மார்ச் 25 வரை பதவி வகித்தார்.

இதேபோன்றே  ஜே. ஆர். ஜயவர்தன 1977 ஜூலை 23இல் பிரதமராக பதவியேற்ற போதும்  1978 பெப்ரவரி  4 வரை மட்டுமே அந்தபதவியில் தொடந்த பின்னர் நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.

இதனையடுத்து  ஆர். பிரேமதாச  1978 பெப்ரவரி 6 ஆம் திகதி பிரதமராக பதவியேற்று 1978 செப்டெம்பர் 7 வரை பதவி வகித்த நிலையில் மீண்டும் நடந்த பாராளுமன்ற த்தேர்தலை தொடர்ந்து மீண்டும் பிரதமராகி   1989 ஜனவரி  2 வரை பதவி வகித்தார்.

அதன்பின்னர்   டி. பி. விஜயதுங்க 1989 மார்ச்  6 முதல்  1993 மே  7 வரை பிரதமராக இருந்த நிலையில் ஜ னாதிபதி பிரேமதாச  படுகொலை செய்யப்பட்டதை அடுத்து விஜேதுங்க புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து ரணில் விக்கிரமசிங்க 1993 மே 17 முதல் 1994 ஓகஸ்ட் 19 வரை பிரதமர் பதவியில் இருந்தார் அதன்பின்னர் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 1994 ஓகஸ்ட் 19  முதல் 1994 நவம்பர்  12 வரையான குறுகிய காலம் பிரதமர் பதவியில் இருந்துவிட்டு ஜனாதிபதியானார் .
இதனால் சிறிமாவோ பண்டாரநாயக்கா மீண்டும் 1994 நவம்பர் 14 ஆம் திகதி பிரதமராகி  2000 ஓகஸ்ட்  9 பெப்ரவரி வரையிலும் அப்பதவியில் இருந்து விட்டு பதவி விலகினார்.

இதனையடுத்து இரத்தினசிறி விக்கிரமநாயக்க 2000 ஓகஸ்ட் 10 இல் பிரதமராக பதவியேற்று 2001   டிசெம்பர் 7 வரை மட்டும் அப்பதவியில் இருந்தார்.

இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க மீண்டும்  2001 டிசெம்பர் 9 இல் பிரதமரானபோதும் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ரணில் விக்கிரமசிங்கவின் அரசைக் கலைத்ததையடுத்து 2004 ஏப்ரல் 6 இல் பதவி விலகினார்.

இதன்பின்னர் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலையடுத்து மஹிந்த ராஜபக்‌ஷ 2004  ஏப்ரல் 6 இல் பிரதமராக பதவியேற்ற போதும் 2005   நவம்பர் 19 வர மட்டுமே அப்பதவியில் இருந்த அவர் பின்னர் ஜனாதிபதியானார்.

இதன் பின்னர் இரு பிரதமர்கள் தமது பதவியை பூரணமாக வகித்த நிலையில் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் 2015 ஜ னவரி 9 இல் பிரதமராகி 2015  ஓகஸ்ட்  21ஆம் திகதி வரை மட்டும் அப்பதவியில் தொடர்ந்தார்.

இந்நிலையில்  2015 ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதை அடுத்து  நல்லாட்சி அரசு என்ற பெயரில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும்  பிரதமராக 2015   ஓகஸ்ட் 21 பதவியேற்று 2018 ஒக்டோபர் 26 வரை மட்டுமே பதவி  வகித்தார். இதன்பின்னர் மைத்திரிபால சிறிசேனவினால் 2018 ஒக்டோபர் 26 இல் மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராக நியமிக்கப்பட்டபோதும் அவரால் 2018 டிசெம்பர் 15 வரை மட்டுமே பதவி வகிக்க முடிந்தது.

இதன்பின்னர் 2018 டிசெம்பர் 16 இல் மீண்டும் பிரதரான ரணில் விக்கிரமசிங்க  2019 நவம்பர் 21 வரை பதவி வகித்த நிலையில்   நடந்த ஜனாதிபதித்தேர்தலில் கோட்டாபய  ராஜபக்‌ஷ வென்றதை தொடர்ந்து 2019   நவம்பர் 21  மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராக அறிவிக்கப்பட்ட நிலையில் 2020 ஓகஸ்ட்  5 வரை பதவி வகித்தார்.

பின்னர் நடந்த பாராளுமன்றத் தேர்தலையடுத்து மீண்டும்  2020 ஓகஸ்ட்  9  இல் பிரதமரான மஹிந்த ராஜபக்‌ஷ மக்களின் போராட்டத்தினால்  2022 மே 9 பதவி விலகினார்.
இதன் பின்னர் கோட்டாபய ராஜபக்‌ஷ அரசில்  ரணில் விக்கிரமசிங்க 2022 மே 12 ஆம் திகதி  பிரதமராக பதவியேற்று 2022 ஜூலை 20 வரி பதவி வகித்த நிலையில் மக்கள் போராட்டத்தினால் கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி பதவியிலிருந்து விலயதினால் ஜனாதிபதி பொறுப்பையேற்றார்.

இதனால்  தினேஷ் குணவர்தன 2022 ஜூலை 22 ஆம் திகதி பிரதமராகி இன்றுவரை பிரதமராக இருக்கின்றார்.

எனினும்  இவரும் தனது முழுமையான பிரதமர் பதவிக்காலத்தை நிறைவு செய்யமுடியாத துரதிர்ஷ்ட பிரதமர்கள்  பட்டியலிலேயே இடம்பிடித்துள்ளார். இந்நிலையில், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. அந்தத் தேர்தலில் தெரிவுச்செய்யப்படும் பிரதமர், தன்னுடைய பதவிக்காலத்தை முழுமையாக நிறைவுச் செய்வாரா? என்பதெல்லாம் அரசியல் களத்திலேயே தங்கியுள்ளது.

நமது நாட்டை பொறுத்தவரையில். ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கு அல்லது நீடித்துக்கொள்வதற்கு கடந்தகாலங்களில் பல திருகுதாளங்கள் போட்டப்பட்டன.

முருகானந்தம் தவம்–

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights