தங்காலை கடற்பகுதியில் கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை உட்கொண்ட 4 மீனவர்கள் உயிரிழந்துள்ளதாக கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மீன்பிடி படகொன்றிலிருந்த 6 மீனவர்கள் இந்த திரவத்தை அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திரவத்தை அருந்திய நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மின்பிடி படகு தங்காலை மீன்பிடி துறைமுகத்திலிருந்து சென்றுள்ளதுடன், படகை வெறோரு படகின் உதவியுடன் கரைக்கு கொண்டு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.