அநுர ஜனாதிபதியானாலும் நாட்டின் பொருளாதாரத்தினை மாற்றியமைக்க முடியாது

0

தமது கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியானாலும் நாட்டின் தற்போதைய நிலைமையை மாற்றியமைக்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற பொது பேரணியில் பேசிய அவர், இதற்கு சிறிது காலம் எடுக்கும் என்றும், வீட்டு பொருளாதாரத்தை கவனமாக நிர்வகிக்க வேண்டும் என்றும் கூறினார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; “சில நேரம் நினைத்துப் பார்க்கிறேன். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் முடியவில்லை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் முடியவில்லை. தேசிய மக்கள் சக்தி எப்படித்தான் இதனை தாங்குவது? எல்லோராலும் முடியாது என்றால், அதைச் செய்ய முடியாது தான்..

தோழர் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாவார்.., விஸ்வகர்மாவின் பலத்தினாலும் மந்திர சக்தியினாலும் இதை மாற்றுவதற்கு வழியில்லை.

கடின அர்ப்பணிப்பு செய்தால், பால் தேநீருக்குப் பதிலாக தேநீர் குடித்தால், தேவையற்ற செலவுகளைக் குறைத்து, நம் வீட்டுப் பொருளாதாரத்தை சிறிது நேரம் கவனமாக நிர்வகித்தால், அதைச் செய்வோம்.”

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights