T20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் முதல் சுற்றிலேயே இலங்கை அணி வெளியேறியுள்ளதாக உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த போட்டியின் முதல் சுற்றில் இலங்கை அணி தாம் பங்குபற்றிய மூன்று போட்டிகளில் இரண்டில் தோல்வியடைந்ததுடன், ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.
நேற்று பங்களாதேஷ் அணிக்கும் நெதர்லாந்து அணிக்கும் இடையிலான போட்டியில் பங்களாதேஷ் வெற்றி பெற்றதன் மூலம் சுப்பர் எட்டு சுற்றுக்குள் நுழையும் இலங்கை அணியின் கடைசி நம்பிக்கையும் தகர்க்கப்பட்டது.
இந்த போட்டியில் இலங்கை அணி இன்னும் ஒரு போட்டியை மட்டுமே எதிர்கொள்ள வேண்டும், அது நெதர்லாந்துக்கு எதிரானது.
ஆனால் அந்த போட்டியில் எப்படி வெற்றி பெற்றாலும் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி அடுத்த சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் இல்லை.
இதேவேளை, ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் இலங்கை அணி முதல் சுற்றுடன் வெளியேறியது இதுவே முதல் தடவையாகும்.