முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா வீட்டிற்குள் துப்பாகிச்சூடு!

0

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு சொந்தமான ஹொரகொல்ல வளவே தோட்டத்தில் தேங்காய் திருட முற்பட்ட ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ள சமபவ்ம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் காணி காவலாளிகள் இருவரை துப்பாக்கிகளுடன் நிட்டம்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நிட்டம்புவ ஹொரகொல்லாகம பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.

காயமடைந்த வட்டுபிட்டியல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவரது உடல்நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர் கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights