முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்கள் உக்ரெய்னுக்கு: G7 மாநாட்டில் ஒப்பந்தம் – கவலையளிப்பதாக ரஷ்யா தெரிவிப்பு

0

ரஷ்யப் படைகளை எதிர்த்துப் போராடுவதற்கு உக்ரெய்னுக்கு 50 பில்லியன் அமெரிக்க டொலர்கள்,முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களைப் பயன்படுத்த G7 மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் பின்வாங்கவில்லை என்பது ரஷ்யாவிற்கு மற்றொரு நினைவூட்டல் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஆனால், மிகவும் வேதனையான பதிலடி நடவடிக்கைகள் என ரஷ்யா அச்சுறுத்தியுள்ளது.

இந்த ஆண்டு இறுதி வரை நிதித் தொகை கிடைக்கப்பெறாவிட்டாலும், உக்ரெய்னின் போர் முயற்சி மற்றும் பொருளாதாரத்தை ஆதரிப்பதற்கான நீண்ட கால தீர்வாக இது கருதப்படுகிறது.

இத்தாலியில் நடைபெற்ற G7 உச்சிமாநாட்டில், உக்ரெய்ன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் பைடன் ஆகியோர் உக்ரெய்னுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே 10 ஆண்டு இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்நிலையில் இது வரலாறு என கியிவ் பாராட்டியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் உக்ரெய்னுக்கு அமெரிக்க இராணுவம் மற்றும் பயிற்சி உதவிகளை வழங்குகிறது.

2022 ஆம் ஆண்டில் உக்ரெய்ன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து G7 மாநாட்டில் 325 அமெரிக்க டொலர் சொத்துக்கள் முடக்கப்பட்டன.

இவை ஒரு வருடத்திற்கு சுமார் 03 பில்லியன் அமெரிக்க வட்டியை உருவாக்குகிறது. G7 திட்டத்தின் கீழ், உக்ரெய்னுக்கு 50 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுக்காக வருடாந்த வட்டியை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அசைக்க முடியாத ஆதரவிற்கு நன்றி தெரிவித்த செலென்ஸ்கி புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து அவர் கூறினார் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

“இது ஒரு உண்மையான வரலாற்று நாள், நாங்கள் சுதந்திரம் பெற்றதிலிருந்து உக்ரெய்ன் மற்றும் அமெரிக்காவிற்குள் வலுவான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம்” என கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights