தற்போது அனைவரும் பயன்படுத்தும் ஒரு செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. வாட்ஸ் அப் என்பது நமது வேலைகளையும் தேவைகளையும் இலகுவாக்கும் ஒரு ஆப் ஆக உள்ளது.
இவ்வாறிருக்கும்போது வாட்ஸ் அப்பை தவறாக பயன்படுத்தும்போது வாட்ஸ் அப் உங்கள் அக்கவுண்டை தடை செய்யும் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
அண்மையில் பல பேரின் வாட்ஸ் அப் அக்கவுண்டுகள் தடை செய்யப்பட்டதை நாம் அறிந்திருப்போம்.
எதற்காக வாட்ஸ் அப் ஒரு அக்கவுண்டை தடை செய்யும்?
ஸ்பேம் மெசேஜ்களை அனுப்புதல், தவறான தகவல்களை பரப்புதல், பண மோசடியில் ஈடுபடுதல், ஆபாச படங்கள், வன்முறை அல்லது வெறுப்பை உண்டாக்கும் கன்டன்கள் போன்றவற்றை வாட்ஸ் அப்பில் பகிர்ந்தாலும் உங்கள் அக்கவுண்ட் தடை செய்யப்படும்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
வாட்ஸ் அப்பில் செய்யப்படும் தேவையற்ற விடயங்களை தவிர்ப்பதற்காக இன்ஜினியர்கள், டேட்டா சயின்டிஸ்ட், ஒன்லைன் பாதுகாப்பு, தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய குழுவை வாட்ஸ் அப் நிறுவனம் வேலைக்கு அமர்த்தியுள்ளது.
உங்கள் வாட்ஸ் அப் அக்கவுண்ட் பாதுகாப்பாக இருக்க என்ன செய்யலாம்?
- உங்களுக்கு ஃபார்வேர்ட் செய்யப்படும் குறுந்தகவல்களை நீங்கள் மற்றவர்களுக்கு ஃபார்வேட் செய்யும் முன் நன்றாக சிந்தித்துக் கொள்ளவும்.
- வரவேற்கத்தகாத குறுந்தகவல்களை பகிர வேண்டாம்.
- பிராட்காஸ்ட் பட்டியலை பொறுப்புடன் பயன்படுத்தவும்.
- வாட்ஸ் அப்பின் சேவை விதிமுறைகளை பின்பற்றவும்.