இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் வெற்றி

0

சுற்றுலா இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது 20-20 போட்டியில் பங்களாதேஷ் 08 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

சில்ஹெட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு வாய்ப்பளித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றது

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் Kamindu Mendis 37 ஓட்டங்களையும், Kusal Mendis 36 ஓட்டங்களையும்,  Angelo Mathews 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சாரபில் Taskin Ahmed, Mahedi Hasan, Mustafizur Rahman, Soumya Sarkar ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 18.1 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணியின் தலைவர் Najmul Hossain Shanto ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 53 ஓட்டங்களை பெற்றதுடன் Litton Das 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில்  Matheesha Pathirana 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதற்க​மை 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இலங்கை அணியும் பங்களாதேஷ் அணியும் தலா ஒவ்வொரு போட்டிகளில் வெற்றிப்பெற்று சமநிலையில் உள்ளன.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights