சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் மரைஸ் எராஸ்மஸ்

0

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த நடுவரான மரைஸ் எராஸ்மஸ், சர்வதேச கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக நடுவராக பணியாற்றி வருகிறார்.

2006ஆம் ஆண்டு இவர் தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நடுவராகப் பணியாற்றினார்.தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச கிரிக்கெட்டில் நடுவராக பணியாற்றியுள்ளார். 3 முறை ஐசிசி-யின் சிறந்த நடுவர் விருதை இவர் வென்றுள்ளார்.

61 வயதாகும் இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து – அவுஸ்திரேலிய அணிகள் மோதும் டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். மேலும் ஓய்வு பெற்றாலும் கிரிக்கெட்டில் தன்னுடைய பங்களிப்பு இருக்கும் எனக் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights