ஜிமெயில் (Gmail) சேவை நிறுத்தப்படப்போவதாக வெளியான செய்திகள் தொடர்பில் அந்த நிறுவனம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஜிமெயில் சேவை இடைநிறுத்தப்படாது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் ஜிமெயில் சேவையை கூகுள் நிறுவனம் நிறுத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பான படங்கள் சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.
இந்த நிலையில், சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறப்பானவை என ஜிமெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.இதற்கமைய, ஜிமெயில் அதன் உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில், “ஜிமெயில் இங்கே உள்ளது” என பதிவிட்டுள்ளது.
இதேவேளை, செயல்படாத ஜிமெயில் கணக்குகளை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.