பல அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி விசேட சரக்கு வரி அதிகரிப்பு

0

அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றுக்கான இறக்குமதிவிசேட சரக்கு  வரியை உயர்த்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, உழுந்து, வெண்டைக்காய், கௌபி, சோளம், குரக்கன் மற்றும் தினை ஆகியவற்றின் இறக்குமதிக்கு உட்பட்ட விசேட பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அரிசி கிலோ ஒன்றுக்கு 200 ரூபாவாக இருந்த விஷேட வர்த்தக வரி 300 ரூபாவாகவும், கௌபி மற்றும் தினை ஆகியவற்றின் இறக்குமதிக்கு கிலோவுக்கு 70 ரூபாவாக இருந்த விசேட வர்த்தக வரி 300 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ சோளத்திற்கு 25 ரூபா சரக்கு வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதுடன், சோளம், உழுந்து இறக்குமதியை விவசாய அமைச்சின் பரிந்துரையின் பேரில் மேற்கொள்ள வேண்டும் எனவும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights