ராமர் கோவில் திறப்பு ; மோடிக்கு ரணில் வாழ்த்து

0

அயோத்தியில் கடந்த மாதம் நடைபெற்ற ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வாழ்த்து தெரிவித்தார்.

மொரிஷியஸிலும், இலங்கையிலும் ஒருசீர் கொடுப்பனவு இடைப்பரப்பு (Unified Payment Interface) (UPI) கொடுப்பனவு முறை அறிமுகம் செய்யும் நிகழ்வு இன்று (12) இந்திய பிரதமர் நரேந்திர மோடி   வீடியோ மாநாடு ஊடாக பங்கேற்புடன் நடைபெற்றது.

இதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நவுத் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

இதில், ஜனாதிபதி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்ட வரலாற்று உறவுகளை பொருளாதார மற்றும் கலாச்சார முன்னணியை கோடிட்டுக் காட்டினார். “பிரதமர் மோடி, உங்களுக்கு இது இரண்டாவது முக்கியமான சந்தர்ப்பம், சில வாரங்களுக்கு முன்பு ராமர் கோயில் திறக்கப்பட்டதற்கு நான் உங்களை வாழ்த்த வேண்டும். இது பொருளாதார ரீதியிலும் கலாச்சார ரீதியிலும் எங்களுடைய தொடர்பைக் காட்டுகிறது,” என்றார்

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights