கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கனடாவில் உள்ள பலர் தற்போது தங்கள் தாய்நாட்டுக்கோ அல்லது வேறொரு வெளிநாட்டுக்கோ செல்லத் திட்டமிட்டு வருவதாகவும் இதனால் நிரந்தர குடியிருப்புக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2.2 மில்லியனாக நிரந்தரக் குடியிருப்புக்காக விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் புலம்பெயர விரும்பும் நாடு என பெயர் பெற்ற நாடு கனடா.ஆனால், இப்போது பல்வேறு காரணங்களால் பலரும் கனடாவிலிருந்து தங்கள் தாய்நாட்டுக்கு திரும்பி வருகிறார்கள்.
இதன் காரணமாக கனடாவில் தற்போது நிரந்தர குடியிருப்புக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஒன்றரை வருடங்களுக்குள் சுமார் 7 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் கனடாவின் பொருளாதாரத்துக்கும் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.