இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களுடைய கறுப்பு தினம்” என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் இன்று(3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த போராட்டத்திற்கு தமிழ் பேசும் மக்கள் முழுமையான ஆதரவினை வழங்க வேண்டும் எனவும் நாளைய தினத்தை கறுப்பு நாளாக அனுஸ்டிக்குமாறும் தெரிவித்தார்.
நாளையதினம் கல்லடி பாலத்திலிருந்து காந்திபூங்கா வரையில் முன்னெடுக்கப்படவுள்ள கறுப்பு சுதந்திர தின பேரணியில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.