212 ஓட்டங்கள் முன்னிலையில் இலங்கை அணி

0

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒற்றை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 212 ஓட்டங்கள் முன்னிலையிலுள்ளது.

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்றுவரும் குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அதன்படி, இலங்கை அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 410 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாடிய அஞ்சலோ மெத்யூஸ் தமது 16ஆவது டெஸ்ட சதத்தை பூர்த்தி செய்து 141 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

அத்துடன், தமது 15 ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்த தினேஷ் சந்திமால் 107 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights