முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டபோது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர் புகைப் பிரயோகத்தினால் சமூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் தெரிவிக்கிக்னறன.
முஜிபுர் ரஹ்மான் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதனை நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.