ரோஹித் சர்மாவின் சாதனையும் வேதனையும்

0

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ரி-20 போட்டியில் களமிறங்கிய இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா சர்வதேச ரி-20 கிரிக்கெட்டில் 150 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனை படைத்தார்.

அவருக்கு அடுத்தபடியாக அயர்லாந்து வீரர் பால் ஸ்டெர்லிங் 134 போட்டிகளில் விளையாடி அந்த பட்டியலில் 2ஆவது இடத்திலுள்ளார். இருப்பினும் எவ்வித ஓட்டங்களையும் பெறாமல் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் அணித்தலைவராக அணியை சிறப்பாக வழி நடத்தி வெற்றியில் தன்னுடைய பங்காற்றினார்.

இவ்வெற்றியையும் சேர்த்து ரோஹித் சர்மா அணித்தலைவராக இதுவரை 41 வெற்றிகளை பெற்றுள்ளார். சர்வதேச ரி-20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பதிவு செய்த இந்திய அணித்தலைவர் என்ற எம்எஸ் டோனியின் வாழ்நாள் சாதனையை ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார். இதற்கு முன் 72 போட்டிகளில் டோனி 41 வெற்றிகளை பெற்றிருந்த நிலையில் தற்போது ரோகித் சர்மா 53 போட்டிகளிலேயே 41* வெற்றிகளை பதிவு செய்து அந்த சாதனையை சமன் செய்துள்ளார்.

ரோஹித் சர்மா 12 தொடர்களில் அணித்தலைவராக வெற்றியை பதிவு செய்துள்ளார். சர்வதேச ரி-20 கிரிக்கெட்டில் அதிக தொடர்களை வென்ற அணித்தலைவர் என்ற புதிய சாதனையும் அவர் படைத்துள்ளார்.

சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் அதிக முறை ஓட்டங்களையும் பெறாமல் ஆட்டமிழந்து 2ஆவது வீரர் என்ற பரிதாபமான சாதனையை சமன் செய்துள்ளார். அத்துடன் சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் அதிக முறை ஓட்டங்களையும் பெறாமல் ஆட்டமிழந்து (டக் அவுட்) ஆசிய வீரர் என்ற பங்களாதேஷ் வீரர் சௌமியா சர்க்கார் சாதனையை உடைத்துள்ள ரோஹித் சர்மா மற்றுமொரு மோசமான சாதனையை படைத்துள்ளார்.

 

1. பால் ஸ்டெர்லிங் (அயர்லாந்து) : 13

2. ரோகித் சர்மா (இந்தியா) : 12*

3. கெவின் ஓ’ப்ராயன் (அயர்லாந்து) : 12

4. சௌமியா சர்க்கார் (பங்களாதேஷ்) : 11

5. ரிகிஸ் சக்கப்வா (ஜிம்பாப்பே) : 11

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights