டெல்லியில் இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகில் குண்டுவெடிப்பு: பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, படையினரும் குவிப்பு
இந்திய தலைநகரின் இராஜதந்திர சுற்றுப்புறமான சாணக்யபுரி பகுதியில் அமைந்துள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகில் குண்டுவெடிப்பு நடந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
மாலை 5.20 மணியளவில் குண்டுவெடிப்பு நடந்துள்ளதாக கூறிப்படுகின்றது. இதனையடுத்து அந்தப் பகுதிக்கு பாதுகாப்பு அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததாக டெல்லி பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தூதரக கட்டிடத்திற்குப் பின்னால் உள்ள வெற்றுப் காணிப் பகுதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
“தூதரகத்திற்கு அருகாமையில் 5:20 மணியளவில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும் என இஸ்ரேலிய தூதரக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இந்நிலையில், பொலிஸார் மற்றும் பாதுகாப்புக் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.