உக்ரைன் அதிபர் மற்றும் மனைவியால் கிளம்பிய புதுசர்ச்சை!

0

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் (Volodymyr Zelenskyy) , அவரது மனைவி ஒலனா ஜெலன்ஸ்காவும் (Olena Zelenska) ‘வோக்’ இதழின் அட்டைப் படங்களில் போஸ் கொடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கீவ், உக்ரைன் போர்க் காட்சிகளை உலகிற்கு காண்பிக்கும் வகையில் அதிபர் ஜெலன்ஸ்கியும் (Volodymyr Zelenskyy)  , அவரது மனைவியும்  (Olena Zelenska) ‘வோக்’ இதழின் அட்டைப் படங்களில் போஸ் கொடுத்துள்ளனர்.

 

அக்டோபர் மாதம் வரவுள்ள வோக் இதழ் நேர்காணலில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy)  மற்றும் அவரது மனைவி ஒலனா (Olena Zelenska)  நேர்காணல் இடம்பெற்றுள்ளது.

இதற்கான நேர்காணல் நிகழ்ச்சிக்கான முன்னோட்ட படங்களை வோக் அதன் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது. அதேசமயம் உக்ரைனின் மீதான ரஷியாவின் படையெடுப்பு 5 மாதங்களை கடந்து நடந்து கொண்டிருக்கிறது.

உக்ரைன் அதிபர் மற்றும்  மனைவியால் கிளம்பிய புதுசர்ச்சை! | New Controversy Started President Of Ukraine Wife

 

தங்கள் நாட்டில் இனி வாழ முடியாது என்ற நிலையில் வெளிநாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயரும் உக்ரைனியர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்குகிறது. அதுமட்டுமல்லாது பொருளாதார ரீதியாகவும் உக்ரைன் மிகப் பெரும் இழப்பைச் சந்தித்து இருக்கிறது.

ரஷியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. எனினும் பேச்சுவார்த்தைகளை முன் நகர்த்தாமல்உக்ரைன் போர் நீடித்து வருகிறது.

உக்ரைன் அதிபர் மற்றும்  மனைவியால் கிளம்பிய புதுசர்ச்சை! | New Controversy Started President Of Ukraine Wife

 

இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy)  மற்றும் அவரது மனைவி ஒலனா ஜெலன்ஸ்கா (Olena Zelenska) ஆகிய இருவரிடம் நடத்தப்பட்ட நேர்காணலில், ஒலனா போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிற்கும் புகைப்படங்களையும் வோக் இதழ் வெளியிட்டுள்ளது.

இந்தப் புகைப்படங்கள் தைரியத்தை காட்டுகின்றது என ஒருபக்கம் வரவேற்பு இருந்தாலும் மறுபக்கம் போர் நடக்கும் நேரத்தில் இவை எல்லாம் அவசியமா என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.