கட்டுநாயக்கவில் பதற்றம்! விமானம் புறப்படுவதற்கு முன் கைதான இளைஞன்!!

0

இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் இன்றைய தினம் வெளிநாடு செல்ல முற்பட்டபோது,  விமானத்தில் இருந்து அவரை இறக்கும் முயற்சியில்  குடிவரவு அதிகாரிகள் சிலர் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் இருந்து துபாய் செல்லவிருந்த ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான காணொளி ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது.

குறித்த நபருக்கு  எதிராக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இவ்வாறு அவரை விமானத்தில் இருந்து பலவந்தமாக  இறக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்கவில் பதற்றம்! விமானம் புறப்படுவதற்கு முன் சிக்கிய இளைஞன் | Travel Ban For Who Participated In The Protest

இதன்போது சக பயணிகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டதோடு, அந்த நபருக்கு எதிரான பயணத்தடை ஆவணங்களை முன்வைக்குமாறு கோரியுள்ளனர்.

எனினும்,  பயணத்தடை விதித்ததற்கான எவ்வித ஆதாரங்களையும் அதிகாரிகள் முன்வைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக  அங்கு பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததுடன் பயணிகளிடையே அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த ஆர்ப்பாட்டக்காரரின் ஆவணங்களை குடிவரவு திணைக்களத்தினர்   பரிசோதனை செய்து அவரை விமானத்திற்கு அனுப்பிய போதும் அதன் பின்னர் மீண்டும் வருகைத் தந்து விமானத்தில் இருந்து அவரை இறக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கட்டுநாயக்கவில் பதற்றம்! விமானம் புறப்படுவதற்கு முன் சிக்கிய இளைஞன் | Travel Ban For Who Participated In The Protest

Leave A Reply

Your email address will not be published.