உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஹமாஸின் அறிவிப்பு!

0

இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ஹமாஸ் போரானது ஒரு மாதத்தை கடந்தும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஹமாஸ் தலைவரின் இந்த கருத்து உலக அரங்கில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹமாஸ் இஸ்ரேல் தரப்புக்கிடையே கட்டார் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் சுமுகமான முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேச்சு வார்த்தையில் இஸ்ரேல் 5 நாள் போர் நிறுத்தமும், தெற்கு காசா உட்பட காசாவின் பகுதிகளில் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதலை நிறுத்தவும் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்குப் பதிலாக, ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிகாத் ஆகியோரின் பிணையில் உள்ள 50 முதல் 100 பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

மேலும் பிணைக்கைதிகள் வெளியேற்றபட்டாலும் இராணுவ வீரர்கள் வெளியேற்றப்பட வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே விரைவில் உடன்பாடு ஏற்படும் என நேற்று(20) அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எனினும்” பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருந்தார்.

40 நாட்களுக்கு மேல் நடைபெறும் இந்த தாக்குதலில் 13,000 ற்கும் மேலானோர் உயிரிழந்துள்ளதுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights