2024 வரவு -செலவுத் திட்டத்தில் வாக்களிப்பதைத் தடுக்கும் முயற்சியில் தோல்வியுற்ற அல்பேனியாவின் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் நடுவில் புகை குண்டுகளை வீசினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் மையத்தில் நாற்காலிகளை அடுக்கி, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா புகை காற்றை நிரப்பிய புகை குண்டுகளை பற்றவைத்தனர்.
அதேவேளை 1992 முதல் 1997 வரை அல்பேனியாவின் முதல் கம்யூனிஸ்ட் ஜனாதிபதியாக இருந்த முன்னாள் பிரதம மந்திரியும், ஜனநாயகக் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவருமான சாலி பெரிஷா, ராமாவின் சோசலிஸ்ட் கட்சியைக் கொண்ட நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை வாயடைக்க அரசாங்கம் முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார்.