க.பொ. த. சா/த பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

0

கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் இன்று தெரிவித்தார்.

வரவு -செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த இதனை நாடாளுமன்றத்தில் இன்று (21) தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், விடைத்தாள்கள் பரீட்சை மூன்று மாதங்கள் தாமதமானதாலேயே கடந்த உயர்தரப் பெறுபேறுகள் தாமதமாகிறதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் சித்தியெய்திய மாணவர்களுக்கு நவம்பரில் உயர்தர வகுப்புகள் ஆரம்பமாவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளை அடுத்த வருடம் 800,000 சிறார்களுக்கு பாதணிகளை வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாது அடுத்த வருடம் அனைத்து ஆரம்ப வகுப்புகளுக்கும் மதிய உணவு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சுசில் பிரேமஜயந்த, பரீட்சைகள் பிற்போடப்பட்டமையால் பிள்ளைகள் வயதாகி வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் பல்கலைக்கழக ஆசிரியர்களின் பரீட்சை கொடுப்பனவு தொடர்பில் சாதகமான வேலைத்திட்டமொன்று திட்டமிடப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights