யாழில் பிக்மீ சாரதியை அச்சுறுத்தி தாக்குதல்!

0

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் பிக்மீ சாரதி ஒருவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

யாழ்- பலாலி வீதியில் திருநெல்வேலி பழம் வீதி அருகில்  தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுக்கூடி தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்றுள்ளார்.

இதன்போது பொலிஸாரும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நடந்ததாக பாதிக்கப்பட்ட பிக்மீ சாரதி கவலை வெளியிட்டுள்ளார்.

முச்சக்கரவண்டி சாரதிகள் அதிக கட்டணம் அறவிட்ட நிலையில் செயலி வழியான முச்சக்கரவண்டி சேவை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் செயலி வழியான முச்சக்கரவண்டி சாரதிகள் அச்சுறுத்தலுக்கும் தாக்குதலுக்கு உள்ளாகுவதும் தொடர்கதையாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights