இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் மித்ரா சக்தி 2023 என்ற இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சி நேற்று ஆரம்பமாகியுள்ளது.
இரண்டு தரப்பு துருப்புக்களிடையே ஒரு மேம்பட்ட அளவிலான இயங்குநிலையை அடைவதில் கவனம் செலுத்தும் வகையில் இந்த பயிற்சிகள் அமையும் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மராத்தா லைட் காலாட்படை படைப்பிரிவைச் சேர்ந்த 120 பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மற்றும் இந்திய விமானப் படையின் (IAF) 15 விமான வீரர்கள் மற்றும் அதிகாரிகள் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
இலங்கை இராணுவத்தின் 53 வது காலாட்படை பிரிவின் வீரர்கள் மற்றும் இலங்கை விமானப்படையைச் சேர்ந்த ஐந்து வீரர்களும் இலங்கை தரப்பில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு விமானப்படைகளின் பங்கேற்பு, ஒன்பதாவது ‘மித்ரா சக்தி’ இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் இருதரப்பு மற்றும் இரு-சேவை பயிற்சியாக அமைகிறது.
நட்பின் சக்தி என்று பொருள்படும் ‘மித்ர சக்தி’ இந்தியாவிலும் இலங்கையிலும் மாறி மாறி நடத்தப்படுகிறது.