எனக்கும் எனது குடும்பத்துக்கும் உயிர் அச்சுறுத்தல் உண்டு! – சபாநாயகரிடம் முறையிட்ட ரொஷான்.

0

எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் உயிர் அச்சுறுத்தல் இருக்கின்றது. இதனைச் சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டு வருகின்றேன்” – என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

“எனது 13 வருட அரசியல் வாழக்கையில் யாரிடம் எந்தக் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடவில்லை. அரச செலவில் விமானத்தில் சென்றதில்லை. மானிய எரிபொருள் வாங்கியதில்லை” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் நிறுவனத் தலைவர் சம்மி சில்வா கூறியதைச் சபையில் சுட்டிக்காட்டிய அமைச்சர் ரொஷான் ரணசிங்க, தன்னை அச்சுறுத்தும் விதத்தில் சம்மி சில்வா கருத்துக்களை முன்வைத்தார் என்றும் குற்றம் சாட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights