இன்று இரவு வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகளும் பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி சிங்கள மொழிமூலமான சித்தி புள்ளிகளில் கொழும்பு கம்பகா, களுத்துறை,கண்டி உட்பட சில மாவட்டங்களுக்கான புள்ளிகள் 154 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று தமிழ்மொழிமூலம் கொழும்பு உட்பட சில மாவட்டங்களுக்கு 147 மற்றும் யாழ்ப்பாணம்,வவுனியா முல்லைத்தீவு, மட்டக்களப்பு, மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கு 145 புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.