சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளை பதவி நீக்குவது தொடர்பிலான கூட்டுப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடாவும், அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று(8) இடம்பெற்ற போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நாளைய தினம் (09) விவாதமொன்றை நடாத்தி, மாலையில் வாக்கெடுப்புக்கு விடப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, சிறிலங்கா கிரிக்கெட்டின் அதிகாரிகளை பதவி நீக்குவது குறித்த வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நாளை நடாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.